2025 செப்டெம்பர் 09, செவ்வாய்க்கிழமை

செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில்...

Ilango Bharathy   / 2021 ஜூலை 04 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரான செந்தில் தொண்டமான், டயமன் கேட்டர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, தியத்தலாவை வைத்தியசாலைக்கு  65 லட்சம் ரூபாய் பெறுமதியான பி.சி.ஆர். இயந்திரமொன்றை,  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஊடாக  வழங்கிவைத்தார்.
 
இந்நிகழ்வில் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான தேனுக விதானகமகே, மேஜர் சுதர்ஷன தெனிபிடிய ஆகியோரும் கலந்துகொண்டனர்.
 
இதன்போது இயந்திரத்தின் ஊடாக பரிசோதனை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான ஆய்வுக்கூடத்தை அமைப்பதற்கான அடுத்தகட்ட வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க  செந்தில் தொண்டமான் ஏற்பாட்டு செய்து தருவதாகத் தெரிவித்தார். 

இந்நிலையில் PCR இயந்திரத்தை பெற்றுக் கொடுத்தமைக்காகப் பதுளை மாவட்ட மக்கள் செந்தில் தொண்டமான் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
 





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X