2025 செப்டெம்பர் 09, செவ்வாய்க்கிழமை

செந்தில் தொண்டமானின் தலையீட்டால் தீர்வு…

Ilango Bharathy   / 2021 ஜூலை 26 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

பலாங்கொடை பிளான்டேஷனுக்கு உட்பட்ட நன்பேரியல் தோட்டம், நெக்ரக் பிரிவு மக்களுக்கு  உலர் உணவுப் பொருட்களை வழங்குவற்கு, பொகவந்தலாவே ராஹுல தேரர் தலைமையில்  சிவன் அருள் அமைப்பினரால்  முயற்சிகள் எடுக்கப்பட்டன.

எனினும் இதற்கு தோட்ட நிர்வாகத்தினால்  அனுமதி மறுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்த விடயம் தொடர்பில் சப்ரகமுவ மாகாண ஆளுனர் டிக்கிரி கொப்பேகடுவேவின் கவனத்துக்கு, பொகவந்தலாவ ராஹுல தேரர் கொண்டுசென்றார்.

பின்னர் சப்ரகமுவ  மாகாண ஆளுனர் தோட்ட நிர்வாகத்திடம்  அத்தியாவசியப் பொருட்களை வழங்க அனுமதி வழங்குமாறு கோரியும் நிர்வாகத்தால் அனுமதி மறுக்கப்பட்டது. 

இந்நிலையில் இவ்விடயம் பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமானின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டத்தை தொடர்ந்து குறித்த அமைப்புக்கு எவ்வித தடைகளுமின்றி தோட்டத்தில் சென்று உலர்வு உணவு பொருட்களை வழங்குவதற்கான அனுமதியை அவர் பெற்றுக்கொடுத்துள்ளார்.

அசாதாரண சூழ்நிலையில் வாழ்வாதாரத்தை இழந்து,நெருக்கடிக்களுக்கு மத்தியில் இருந்த நன்பேரியல் தோட்ட மக்கள் , இந்த உதவியை பெற்றுக் கொடுத்த செந்தில் தொண்டமானுக்கும்,சிவன் அருள் அமைப்பினருக்கும்  மனமார்ந்த  நன்றிகளை  தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X