Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 நவம்பர் 21 , மு.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சரின் 2.5 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டின் மூலம் அமைக்கப்பட்ட கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இலுமிச்சையடி, கரந்தவட்டவான் - செல்லப்பா அணைக்கட்டு, மக்கள் பாவனைக்கு நேற்று (20) கையளிக்கப்பட்டது.
கரந்தவட்டவான் கமநல அமைப்பினரின் வேண்டுகோளுக்கிணங்க நிர்மானிக்கப்பட்டுள்ள இவ்வணைக்கட்டை அண்டிய பகுதிகளிலுள்ள சுமார் 300 ஏக்கர்களுக்கும் கூடுதலான விவசாயம் மேற்காள்ள முடியுமென நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம், நீர்ப்பாசனத் திணைக்கள மாகாணப் பிரதிப் பணிப்பாளர் எம். வடிவேல், பிரதிப் பணிப்பாளர் காரியாலயப் பொறியியலாளர் எஸ்.செந்தூரன், நீர்ப்பசனத் திணைக்கள செங்கலடி பிரதச பொறியியலாளர் எ.பிரசாத், கரந்தவட்டவான் கமநல அமைப்பின் விவசாயிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
(படப்பிடிப்பு: பேரின்பராஜா சபேஷ்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
49 minute ago
2 hours ago
5 hours ago