Editorial / 2019 டிசெம்பர் 23 , மு.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

அம்பாறையிலிருந்து திருகோணமலைப் பயணித்த சொகுசு மினி பஸ்ஸொன்று, சம்மாந்துறையில் நேற்று (22) விபத்துக்குள்ளானதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
தினமும் அம்பாறையிலிருந்து திருகோணமலைச் செல்லும் இந்த பஸ் திடிரென சம்மாந்துறை, வீரமுனை, ஆண்டியடிச் சந்திக்கருகில் வேகக் கட்டுபாட்டையிழந்து, மின்கம்பம், மதில் ஆகியவற்றுடன் மோதி, அருகேயுள்ள வாய்க்காலுக்குள் வீழ்ந்துள்ளது.
இதன்போது, குறித்த பஸ்ஸில் பயணம் செய்தவர்கள், சிறுசிறு காயங்களுடன் மீட்கப்பட்டனர் என்பதுடன், சாரதி, காயமடைந்த நிலையில், அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை, சம்மாந்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(படங்கள்: பாறுக் ஷிஹான்)




26 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
2 hours ago