2025 ஒக்டோபர் 31, வெள்ளிக்கிழமை

சௌமியமூர்த்தி தொண்டமானின் 26 ஆவது சிரார்த்த தினம்

Janu   / 2025 ஒக்டோபர் 30 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

'மலையகப் பெருந்தலைவர் அமரர். சௌமியமூர்த்தி தொண்டமானின் 26 ஆவது சிரார்த்த தினம் வியாழக்கிழமை (30) அனுஷ்டிக்கப்பட்டது.

கொழும்பு பழைய நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு இ.தொ.காவின் பிரதிநிதிகள் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வில் இ.தொ.காவின்  பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், தலைவர் செந்தில் தொண்டமான், நிதிச்செயலாளரும், தவிசாளருமான மருதபாண்டி ராமேஸ்வரன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவர்களான கணபதி கனராஜ், அனுசியா சிவராஜா, பிரதி பொதுச்செயலாளர் செல்லமுத்து, உப தலைவர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள், உறுப்பினர்கள் உட்பட இ.தொ.கா முக்கியஸ்தர்கள் என பலர் பங்கேற்றிருந்தனர்.

இந்நிகழ்வின் பின்னர் இ.தொ.காவின் தலைமையகமான சௌமியபவனிலும் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றிருந்தன.

சுதந்திர இலங்கையில் உருவான முதலாவது நாடாளுமன்றத்தில் உறுப்பினராக அங்கம் வகித்தவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான். இலங்கை, இந்திய காங்கிரஸ் உருவாக்கத்துக்கு முக்கிய பங்களிப்பு வழங்கிய அவர் அதன் தலைவராகவும் செயல்பட்டுள்ளார்.  இலங்கை, இந்திய காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸாக பெயர் மாற்றம் பெற்றது முதல் அதன் தலைவராக செயற்பட்டார். முக்கிய பல அமைச்சுகளை வகித்துள்ளார். இலங்கையில் சிறந்ததொரு தேசிய தலைவராகவும் செயல்பட்டார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X