J.A. George / 2020 ஜூலை 15 , பி.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை கடற்படையின் 24ஆவது தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, ஜனாதிபதியை சந்தித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இன்று (15) இடம்பெற்றுள்ளது.
அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, முன்னதாக கடற்படையின் பிரதானியாக கடமை வகித்திருந்த நிலையில் இன்று (15) முதல் அமுலுக்கு வரும் வகையில் கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, இதுவரை கடற்படை தளபதியாக இருந்த அட்மிரல் பியால் டி சில்வா, இன்று (15) ஓய்வுபெற்றுச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .