Editorial / 2026 மார்ச் 19 , பி.ப. 06:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

முஸ்லிம்களின் புனித ரமலான் மாத நோன்புத் துறப்பைக் (Iftar) குறிக்கும் வகையில், நேற்று (18) பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விசேட இப்தார் நிகழ்வில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்துகொண்டார்.
இஸ்லாமிய மதத் தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் இராஜதந்திரிகள் உள்ளிட்ட பலரின் பங்கேற்புடன், மத வழிபாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு இந்த நிகழ்வு இனிதே நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி வரவேற்புரையை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முஸாப்பர் விசேட உரையாற்றினார். நிகழ்வின் ஒரு பகுதியாக, அங்கு வருகை தந்திருந்த அதிதிகளுடன் ஜனாதிபதி சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இந்நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க, வலுசக்தி பிரதி அமைச்சர் அர்கம் இல்யாஸ் ஆகியோருடன் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
மேலும், மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப், கொழும்பு மேயர் வ்ராய் கெலி பல்தசார், உயர்மட்ட அரச அதிகாரிகள், வெளிநாட்டு உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்கள் உள்ளிட்ட பல முக்கிய அதிதிகள் இந்நிகழ்வைச் சிறப்பித்தனர்.


























13 minute ago
18 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
18 minute ago
3 hours ago