Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2021 செப்டெம்பர் 14 , பி.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில், கொரோனா தொற்று நிலைமை நீங்க வேண்டி, யாழ்ப்பாணத்தில் சிறப்பு யாகமொன்று, யாழ்பபாணம் - பொன்னாலை வரதராஜப் பெருமாள் கோவிலில், இன்று (14) நடைபெற்றது.
இலங்கையில் உள்ள நான்கு கிருஷ்ணன் கோவில்களில், இவ்வாறான பூஜை வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில், பொன்னாலை வரதராஜப் பெருமாள் கோவிலில், இன்று (14), இந்த யாகம் நடைபெற்றது.
பொன்னாலை வரதராஜப் பெருமான் கோவில் பிரதம குருக்கள் சோமஸ்கந்த சர்மா மற்றும் நயினா நாகதீபம் விகாராதிபதி மீககா வதுலே ஸ்ரீ விமல ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்த யாகத்தில், பொதுபல சேனாவின் பொதுசெயலாளர் கலகொட அத்துரலிய ஞானசார தேரர் கலந்துகொண்டார்.
யாகத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த ஞானசார தேரர், இன மத வேறுபாடு இன்றி, கொரோனா தொற்றில் இருந்து விடுபட வேண்டியே யாழ்ப்பாணத்தில் இந்த சிறப்பு பூசை வழிபாட்டை மேற்கொண்டதாகத் தெரிவித்தார்.
'சிங்களவராக இருக்கட்டும், தமிழராக இருக்கட்டும், எந்த இனத்தவராயினும் அனைத்து இனத்தை சேர்ந்தவர்களும் கொரோனா தொற்றால்; பாதிக்கப்பட்டு கஷ்டப்படுகிறார்கள். சிலர் ஒரு நேர உணவுக்கு கூட வழியில்லாமல் உள்ளார்கள்.
'கடவுள் மீதுள்ள நம்பிக்கையின் காரணமாக குறிப்பாக, பௌத்த மதத்தில் நாம் பின்பற்றும் ஒரு விதிமுறையை போல, இந்து மதத்தில் உள்ள ஆகம விதிமுறையை இணைத்து, இந்த தொற்றில் இருந்து நாடு விடுபட வேண்டுமென, கடவுளிடம் வேண்டி, ஒரு விசேட பிரார்த்தனை மேற்கொண்டுள்ளோம்' என்றார்.
பௌத்தம், இந்து, இஸ்லாம் என்ற பேதத்தை மறந்து, அனைவரும் இணைந்து இந்த கொரோனா நோயிலிருந்து விடுபடுவதற்காக ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் எனத் தெரிவித்த அவர், குறித்த வழிபாட்டின் மூலம் மக்களுக்கு நன்மை கிடைக்கும் என நம்புவதாகவும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
16 minute ago
43 minute ago
6 hours ago