Editorial / 2019 டிசெம்பர் 18 , பி.ப. 12:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 70ஆவது ஆண்டு நிறைவு விழா, கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தலைமையில், யாழ்ப்பாணத்தில் உள்ள இளங்கலைஞர் மண்டபத்தில், இன்று நடைபெற்றது.
கட்சித் தலைவர் மாவை. சோ. சேனாதிராஜா கட்சிக் கொடியை ஏற்றி வைக்க நிகழ்வுகள் ஆரம்பமாகின.
நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கே. துரைராஜசிங்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளான புளொட், ரெலோ அமைப்புகளின் தலைவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களுமான த. சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், பா. யோகேஸ்வரன், ஈ.சரவணபவன், எஸ். சிவாமோகன், என்.கோடீஸ்வரன், ஜி.சிறிநேசன், வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், யாழ். மாநகர மேயர் இ.ஆர்னோல்ட் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




3 hours ago
3 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
5 hours ago
5 hours ago