2025 ஒக்டோபர் 15, புதன்கிழமை

தியானன்மென் சதுக்கத்தில், பிரதமர் அஞ்சலி

Janu   / 2025 ஒக்டோபர் 14 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, ஒக்டோபர் 14 ஆம் திகதி பீஜிங்கில் அமைந்திருக்கும் தியானன்மென் சதுக்கத்தைப் பார்வையிட்டதுடன், அங்கு சீனாவின் தேசிய முக்கியத்துவம் மிக்க இரண்டு நினைவுச்சின்னங்களாகிய, மக்கள் நாயகர்களின் நினைவுச்சின்னம் (Monument to the People's Heroes) மற்றும் மாவோ சேதுங் நினைவுக் கூடம் (Mao Zedong Memorial Hall) ஆகியவற்றிற்கு  அஞ்சலி செலுத்தினார்.

அங்கு மலரஞ்சலி செலுத்திய பிரதமர், சீன மக்கள் குடியரசின் ஸ்தாபகத் தலைவரான அமரர் தலைவர் மாவோ சேதுங் மற்றும் தேசத்தின் புரட்சிகரப் போராட்டத்திற்காக தமது உயிரைத் தியாகம் செய்த நாயகர்களை நினைவுகூர்ந்து மரியாதை செலுத்தினார்.

தியானன்மென் சதுக்கத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள மக்கள் பேரவையின் மண்டபத்தில் (Great Hall of the People) இடம்பெற்ற சம்பிரதாயபூர்வமான நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கு முன்னர், சீன மக்கள் குடியரசின் சிரேஷ்ட தலைவர்களால் பிரதமர் வரவேற்கப்பட்டார்.

பிரதமரின் இந்த உத்தியோகபூர்வ பீஜிங் விஜயம், சீனாவின் வரலாற்று மரபுகள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்பு ஆகியவற்றின் மீது இலங்கை கொண்டிருக்கும் மரியாதையை வெளிப்படுத்துகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X