2025 ஜூலை 23, புதன்கிழமை

தாயும் மகனும் கொலை…

Editorial   / 2017 ஒக்டோபர் 18 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சவுக்கடியில் 26 வயதுடைய தாயும் 11 வயதுடைய மகனும் கொலைசெய்யப்பட்டுள்ளனரென, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

சவுக்கடி, முருகன் கோவில் வீதியிலுள்ள வீடொன்றில் இருந்து மதுவந்தி மற்றும் அவரது மகன் மதுசன் ஆகிய இருவருவரின் சடலங்களையும், இன்று (18) காலை, ஏறாவூர் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இவர்கள் வசித்து வரும் வீட்டின் கூரை பிரிக்கப்பட்டுள்ள நிலையில் காணப்படுவதாகவும் கூரையைப் பிரித்து அதனூடாக வீட்டினுள் இறங்கி இனந்தெரியாத நபர்கள், இவர்களை அடித்துக் கொலை செய்திருக்கலாமென, பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

(படங்கள்: பேரின்பராஜா சபேஷ்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .