2025 மே 19, திங்கட்கிழமை

தியகலயில் பயணிக்க எச்சரிக்கை

Kogilavani   / 2018 மே 24 , பி.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ, எஸ்.சதிஸ்

கினிகத்தேனை - தியகல பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள மண்சரிவு காரணமாக, அவ்வீதியினூடாகப்  பயணிக்கும் வாகன சாரதிகளை, மிகுந்த அவதானத்துடன் வாகனத்தைச் செலுத்துமாறு, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண வானிலை மற்றும் மண்சரிவு காரணமாக, இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அம்பகமுவ பிரதேச சபை, ஒருவழிப் போக்குவரத்துக்கும் உத்தரவிட்டுள்ளது.

மேலும், மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதால், மாற்றுப் பாதையைப் பயன்படுத்துமாறும், வாகன சாரதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X