Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Freelancer / 2021 ஜூலை 12 , மு.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீர்கொழும்பு கொத்தலாவல பாலம் அருகில் நேற்று (11) மாலை 6.30 மணியளவில் மக்கள் விடுதலை முன்னணியின் அகில இலங்கை பொது மீனவர் சங்கத்தினர் படகுகளில் ஏறிநின்று தீப்பந்தம் ஏந்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நீர்கொழும்பு களப்பில் படகுகளில் ஏறி வந்து இவர்கள்இ ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் எரிபொருள் விலை அதிகரிப்பு, மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை, மக்களின் வாழ்வாதார பிரச்சினை, கொரோனா பிரச்சினை உட்பட பல்வேறு மக்கள் பிரச்சினைகளை முன்வைத்து பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியிருந்தனர்.
அகில இலங்கை பொது மீனவர் சங்கத்தின் உறுப்பினரும் நீர்கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான காமினி பெர்னாந்து, நீர்கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் வைத்தியர் ஹென்ரி ரொஸைரோ ஆகியோரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
M
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 May 2025
14 May 2025
14 May 2025