Editorial / 2019 ஓகஸ்ட் 30 , மு.ப. 10:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்
நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவத் தீர்த்தத் திருவிழா இன்றைய தினம் காலை நடைபெற்றது.
காலை 6 மணியளவில் ஆரம்பமான விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வேல் பெருமான், வள்ளி, தெய்வானை, பிள்ளையார், அம்மன் சமேதரராய் காலை 07 மணிக்கு கோவில் தீர்த்த கேணியில் தீர்த்தமாடி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.
இன்றைய தீர்த்த திருவிழாவுக்கு நாட்டின் பல பாகங்களில் இருந்தும் , வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
அதேவேளை ஆயிரக்கணக்கான அடியவர்கள் அங்க பிரதட்சணம் செய்தும், நூற்றுக்கணக்கானவர்கள் காவடிகள் எடுத்தும் கற்பூர சட்டிகள் ஏந்தியும் முருக பெருமானை வழிபட்டனர்.
இதேவேளை இன்றைய தினம் மாலை 6 மணிக்கு கொடியிறக்கம் நடைபெறவுள்ளது. அதனுடன் மகோற்சவ திருவிழாக்கள் நிறைவடையவுள்ளன.
நாளைய தினம் மாலை 5 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


33 minute ago
7 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
7 hours ago
09 May 2026