Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 ஒக்டோபர் 24 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் ரவிசாந்
தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டுக் கோண்டாவில் பொதுநூலகத்தின் ஏற்பாட்டில் யாழ். கோண்டாவில் பரஞ்சோதி வித்தியாலயத்தில் இன்று வாசிப்பு மாத விழிப்புணர்வு உரை நிகழ்வு நடைபெற்றது.
காலை 08 மணி முதல் வித்தியாலய அதிபர் க. தவசீலன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கோண்டாவில் பொதுநூலக நூலகர் த. சத்தியமூர்த்தி, நல்லூர் பிரதேசசபையின் உறுப்பினர் கு. மதுசுதன் மற்றும் அதிபர் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாசிப்பின் முக்கியத்துவம் தொடர்பாக எடுத்துக் கூறினர்.
கோண்டாவில் பொது நூலகத்தின் ஏற்பாட்டில் கோண்டாவில் இந்துக் கல்லூரியில் நேற்று வாசிப்பு மாத விழிப்புணர்வு உரை நிகழ்வு நடைபெற்றது.
மேற்படி கல்லூரியின் அதிபர் செ. மோகநாதன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் கோண்டாவில் பொதுநூலக நூலகர் த.சத்தியமூர்த்தி, நல்லூர் பிரதேச சபையின் உறுப்பினர் கு. மதுசுதன் ஆகியோர் கலந்து கொண்டு வாசிப்பின் மகத்துவம் தொடர்பாக உரைகளாற்றினர்.
இதேவேளை, கோண்டாவில் சி.சி.த. க ஆரம்பப் பிரிவுப் பாடசாலையில் நாளை (25) காலை 08 மணி முதல் வாசிப்பு மாத விழிப்புணர்வு உரை நிகழ்வு நடாத்தப்படவுள்ளதாக கோண்டாவில் பொதுநூலக நூலகர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
6 hours ago