R.Maheshwary / 2022 ஜூன் 02 , மு.ப. 09:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
பத்தாயிரம் கிலோ கிராம் தேயிலைத் தூளை ஏற்றிச் சென்ற லொறியொன்று, வீதியில் குடை சாய்ந்ததால், ஹட்டன்- போடைஸ் வீதியுடனான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இன்று (2) அதிகாலை அல்பியன் தோட்டத்திலிருந்து கொழும்பு ஏல விற்பனை சந்தைக்கு தேயிலைத் தூளை ஏற்றி வந்த லொறி, அல்பியன் பகுதியில் மற்றுமொரு வாகனம் முன்னால் பயணிக்க இடம்கொடுக்க முற்பட்ட போதே, இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவித்துள்ள அக்கரப்பத்தனை பொலிஸார், லொறி விபத்துக்குள்ளான இடமானது, இலகு ரக வாகனங்கள் மாத்திரம் பயணிக்கும் பகுதி என்றும் தெரிவித்துள்ளனர்.






51 minute ago
6 hours ago
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
6 hours ago
22 Dec 2025