2025 மே 24, சனிக்கிழமை

நூற்றாண்டு வைபவம்…

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 29 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, ஓட்டமாவடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் நூற்றாண்டு விழா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று (29) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட வர்த்தக மற்றும் கல்விக் கண்காட்சியை பார்வையிட்ட ஜனாதிபதி, கல்லூரியின் மூன்று மாடி நிர்வாக கட்டடத் தொகுதியையும் திறந்து வைத்தார்.

கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன், பிரதியமைச்சர் அமீர் அலி, கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோ, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், பாடசாலையின் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பாடசாலையின் பழைய மாணவர்கள் உட்பட பெருந்திரளானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X