Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஏப்ரல் 18 , பி.ப. 03:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹியங்கனையில் நேற்று (16) அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்த 10 பேரின் சடலங்கள், பெருந்திரளான மக்கள் கண்ணீர்மல்க, மட்டக்களப்பில், இன்று (18) நல்லடக்கம் செய்யப்பட்டன.
சடலங்கள், மட்டக்களப்பு - கல்லடியிலுள்ள சென். செபஸ்தியார் ஆலயத்துக்குக் கொண்டுவரப்பட்டு, அங்குள்ள மேயர் மண்டபத்தில் வைத்து இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.
இந்த இறுதிச் சடங்குகளை, மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் அருட்கலாநிதி ஜோசப் பொன்னையா நடத்தி வைத்தார்.
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மட்டக்களப்பு மாநகர மேயர், மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள் திணைக்களத் தலைவர்கள், அரச அதிகாரிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், சமயப் பிரமுகர்கள், குடும்ப உறவினர்கள், பெருந்திரளான பொதுமக்கள் இதில் கலந்துகொண்டிருந்தனர்.
சென். செப்ஸ்தியர் ஆலயத்திலிருந்து சடலங்கள், வாகனங்களில் ஏற்றப்பட்டு நல்லடக்கத்துக்காகக் கொண்டு செல்லப்பட்ட போது, வீதிகளின் ஓரங்களில், நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள், கண்ணீர்மல்க தமது இறுதி மரியாதையைச் செலுத்தினர்.
இந்தச் சடலங்களில் ஆறு பேரின் சடலங்கள், மட்டக்களப்பு - கல்லியங்காடு கத்தோலிக்க சேமக்காலையிலும் 4 பேரின் சடலங்கள், மட்டக்களப்பு -தன்னாமுனையிலுள்ள கிறிஸ்தவ சேமக்காலையிலும் நல்லடக்கம் செய்யப்பட்டன.
மட்டக்களப்பு நகரின் பல இடங்களிலும் இன்றையதினம் வெள்ளைக் கொடிகள் பறக்க விடப்பட்டதுடன், அஞ்சலி செலுத்தும் பதாதைகளும் அங்காங்கே தொங்கவிடப்பட்டிருந்தன என்பதுடன் மட்டக்களப்பு பிரதேசமே சோகமயமாகக் காட்சியளித்தது.
(படங்கள் : எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான்)
4 minute ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
9 hours ago
9 hours ago