Editorial / 2019 ஓகஸ்ட் 29 , பி.ப. 12:50 - 0 - {{hitsCtrl.values.hits}}









எம்.றொசாந்த, எஸ். நிதர்ஷன்
வரலாற்றுச் சிறப்புமிக்க, யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவத் தேர்த் திருவிழா, இன்று (29) காலை நடைபெற்றது.
காலை 6 மணியளவில் ஆரம்பமான விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து, ஆறுமுகப் பெருமான், வள்ளி - தெய்வானை சமேதரராய், காலை 7 மணிக்கு தேரில் ஆரோகணித்து, பக்தர்களுக்கு அருட்காட்சிளித்தார்.
தொடர்ந்து, வள்ளி தெய்வானை சமேதரராய் தேரில் வெளிவீதி உலா வந்த ஆறுமுகப் பெருமான், காலை 9.45 மணிக்கு, தேர் இருப்பிடத்தை அடைந்தார்.
இந்தத் தேர்த் திருவிழாவில், நாட்டின் பல பாகங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
அதேவேளை, ஆயிரக்கணக்கான அடியவர்கள் அங்க பிரதட்சணம் செய்தும் நூறுக்கணக்கானவர்கள் காவடிகள் எடுத்தும், கற்பூரச் சட்டிகள் ஏந்தியும், முருக பெருமானை வழிபட்டனர்.
நாளை தினம் (30) காலை 7 மணிக்கு, தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளது. மாலை 5 மணிக்கு, கொடியிறக்கம் நடைபெறவுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.
34 minute ago
7 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
7 hours ago
09 May 2026