Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஜூலை 28 , பி.ப. 12:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவம், இன்று (28) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
தொடர்ந்து இருபத்தைந்து தினங்கள் நடைபெறவுள்ள திருவிழாவில் 06 ஆம் திகதி மாலை மஞ்சத்திருவிழாவும், 12 ஆம் திகதி அருணகிரிநாதர் உற்சவமும், 15 ஆம் திகதி காலை சூர்யோற்சவமும், மாலை கார்த்திகை உற்சவமும், 16 ஆம் திகதி சந்தானகோபலர் உற்சவமும், அன்றைய தினம் மாலை கைலாசவாகனத் திருவிழாவும் இடம்பெறவுள்ளன.
அத்துடன், 17 ஆம் திகதி காலை கஜவல்லி - மஹாவல்லி உற்சவமும், அன்றைய தினம் மாலை வேல்விமானமும் (தங்கரதம்) உற்சவமும் 18ஆம் திகதி திங்கட்கிழமை காலை தண்டாயுதபாணி உற்சவமும், அன்றைய தினம் மாலை ஒருமுக உற்சவமும், 19 ஆம் திகதி மாலை சப்பற உற்சவமும், 20 ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும், 21 ஆம் திகதி காலை தீர்த்தத்திருவிழாவும், 22 ஆம் திகதி மாலை பூங்காவனத் திருவிழாவும், மறுநாள் வைரவர் உற்சவமும் நடைபெறவுள்ளன.
1 hours ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
4 hours ago