Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 பெப்ரவரி 04 , பி.ப. 03:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
'பறப்பிழந்த வண்ணத்துப்பூச்சி' எனும் நாடகம் மட்டக்களப்பு - கல்லடி சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் இராசதுரை அரங்கில், சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் நாடக விரிவுரையாளர் ஏ.விமலராஜ் தலைமையில் இடம்பெற்றது.
இந்த நாடகமானது ஒரு குடும்பத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டதாகவும், மாணவர்களிடமுள்ள ஆற்றலை அறிந்து, அவர்களின் திறனுக்கு ஏற்ப அதை வளர்க்கவேண்டும் என்கின்ற தொனிப் பொருளில் இந்த நாடகத்தை நிறுவகித்து, குறித்த சம்பவத்தை மாணவர்களிடத்திலும், பொதுமக்களிடத்திலும் கொண்டு செல்லவேண்டும் என்பதற்காகவே கல்லுரியின் நாடகத்துறை மாணவர்களும், விரிவுரையாளர்களும் ஒன்று சேர்ந்து உருவாக்கியதாகவும் சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் நாடக விரிவுரையாளர் ஏ.விமல்ராஜ் தெரிவித்தார்.
இந்த நாடகம் நான்கு காட்சிகளாக காட்சிப்படுத்தப்பட்டதில் பெரும் எண்ணிக்கையான பாடசாலை மாணவர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டு பயன்பெற்றதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். (படங்கள் - துஷாரா )
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
3 hours ago