2025 மே 20, செவ்வாய்க்கிழமை

நானுஓயாவுக்கு வந்தது கரிகோச்சி

Editorial   / 2018 ஜனவரி 30 , பி.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

இரண்டு வருடங்களுக்குப் பிறகு, கொழும்பு கோட்டையிலிருந்து பண்டாரவளை வரையானப் பயணத்தை ஆரம்பித்துள்ள நிலக்கரி ரயில் (கரிகோச்சி), நானுஓயா புகையிரத நிலையத்தை, இன்று (30) வந்தடைந்தது.

ஜேர்மன், அவுஸ்திரேலியா, லண்டன் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் சுற்றுலா பயணிகளுடனேயே, இந்த ரயில் நானுஓயாவை வந்தடைந்துள்ளது.

கொழும்பு கோட்டையிலிருந்து, கடந்தத் திங்கட்கிழமை (29) தனதுப் பயணத்தை ஆரம்பித்த இந்த ரயில், கண்டி புகையிரத நிலையத்தில், திங்கட்கிழமை (29) தரித்து நின்றதுடன், நேற்றுக் காலை நானுஓயா புகையிரத நிலையத்தை வந்தடைந்தது.

இந்நிலையில் மேற்படி ரயிலானது, நானுஓயாவிலிருந்து பண்டாரவளைக்கு, நாளை புதன்கிழமை தனதுப் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது.

இறுதியாகக் கடந்த 2016ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி, இந்த நிலக்கரி ரயிலானது, பண்டாரவளை வரை தனதுப் பயணத்தை மேற்கொண்டிருந்தமைக்  குறிப்பிடத்தக்கது.

ஹட்டன் புகையிரத நிலையத்தில் சிறிது நேரம் தரித்து நின்ற ரயிலை, பெருந்திரளான மக்கள் பார்வையிட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X