Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜனவரி 29 , மு.ப. 11:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.திவாகரன், வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு தெற்கே கொக்கட்டிச்சோலை பகுதியில், இலங்கை விசேட அதிரடிப்படையினரால் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் மக்களின் 31ஆவது ஆண்டு நினைவு நாள், நேற்றுப் பிற்பகல் 2.30 மணியளவில் பிரதேச மக்களால் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத் தூபிக்கு மலர் சூடி, தீபம் ஏற்றி நினைவஞ்சலி செலுத்தப்பட்டதுடன், நினைவு உரைகளும் நிகழ்த்தப்பட்டன.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
1987ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28ஆம் திகதி , வழமைக்கு மாறாக வெடிச்சத்தங்கள் கேட்டுள்ளன. இதனால் பயமுற்ற மக்கள், அருகிலுள்ள தாம் தொழில்புரியும் இறால் பண்ணைக்குப் பாதுகாப்புத் தேடிச் சென்றனர்.
இந்த வேளையில், பண்ணையிலே வேலை செய்தவர்களும், பண்ணையருகிலுள்ள ஆண்களும் அழைக்கப்பட்டு, மகிழடித்தீவு சந்தியில் வைத்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.
இப்படுகொலையில் முதலைக்குடா, முனைக்காடு, மகிழடித்தீவு, அம்பிளாந்துறை போன்ற பகுதிகளைச் சேர்ந்த 87 பேர் உயிரிழந்தனர்.
இப்படுகொலை நாள், இப்பிரதேச மக்களால் விடுதலைப் புலிகளின் காலத்தில் நினைவு கூரப்பட்டு வந்த நிலையில், முன்னைய ஆட்சியில் இதற்குத் தடைகளும் விதிக்கப்பட்டிருந்தது. இவ் ஆட்சியில் தற்போது தொடர்ச்சியாக நினைவு கூரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago