Editorial / 2021 ஜூன் 18 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடுகள் அமுலில் உள்ளன. மே மாதம் 21ஆம் திகதியன்று அமுல்படுத்தப்பட்ட பயணக்கட்டுப்பாடுகள், அத்தியாவசிய பொருள்களை கொள்வனவு செய்வதற்காக, மே. 25ஆம் திகதியன்று தளர்த்தப்பட்டது.
அதன்பின்னர், வாரத்துக்கு வாரம் நீடிக்கப்பட்டு, ஜூன் 21ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டது. அன்றையதினம் அதிகாலை 4 மணியளவில் பயணக்கட்டுப்பாடுகள் நீக்கப்படுமென அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஆனால், பயணக்கட்டுப்பாடுகள் அமுலில் இருந்த காலப்பகுதியில் விசேடமாக கொழும்பில் பல வீதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தன. அவ்வாறான புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் உலாவருகின்றது.
இந்தப் படம், கொழும்பின் பிரதான வீதியொன்றில் வாகனங்கள் இன்று (18) வரிசையாக பயணிப்பதை காண்பிக்கிறது.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .