Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2021 செப்டெம்பர் 20 , மு.ப. 08:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படை முகாம் முன்னால் திங்கட்கிழமை(20) அதிகாலை 5 மணியளவில் பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது என களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருதாவது…
திருகோணமலை கிண்ணியா பகுதியிலிருந்து மீன்களை ஏற்றிக் கொண்டு கல்முனை பகுதி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பட்டா ரக வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் பயணித்த எவருக்கும் எதுவித காயங்களும் ஏற்படாமல் தெய்வாதீனமாக உயிர் உயிழைத்துள்ளனர். நாய் ஒன்று வீதிக்கு குறுக்காக பாய்ந்ததில் இவ்விபத்து ஏற்பட்டதாகவும், அதில் பயணித்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும், வாகனம் பெரிதும் உடைந்து பழுதடைந்துள்ளது, அதில் ஏற்றிக்கொண்டு சென்ற பெருமளவான மீன்ளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளன.
இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் ஸ்தலத்துக்கு விரைந்த களுவாஞ்சிகுடி போக்குவரத்துப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். (படங்களும் தகவலும் வ.சக்திவேல்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
14 Jul 2025
14 Jul 2025