2025 மே 19, திங்கட்கிழமை

பதவிப்பிரமாணம்…

Editorial   / 2018 மே 01 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய அமைச்சரவை ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்….

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் இன்று (01) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்தனர்.

நியமனம் பெற்ற அமைச்சர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு

  1. லக்ஷ்மன்  கிரியெல்ல   - அரச தொழில்முயற்சிகள் மற்றும் கண்டி நகர

                                            அபிவிருத்தி அமைச்சர்

  1. கலாநிதி சரத் அமுனுகம      - விஞ்ஞான, தொழில்நுட்ப, ஆய்வுகள், திறன்

அபிவிருத்தி, தொழிற் பயிற்சி மற்றும் கண்டி   

 மரபுரிமைகள் அமைச்சர்

  1. எஸ்.பி. நாவின்ன             - உள்நாட்டலுவல்கள் மற்றும் வடமேல் மாகாண

  அபிவிருத்தி அமைச்சர்

  1. மஹிந்த அமரவீர             - விவசாய அமைச்சர்
  2. துமிந்த திசாநாயக்க           - நீர்ப்பாசன, நீர் வழங்கல் மற்றும் இடர்

 முகாமைத்துவ அமைச்சர்

  1. விஜத் விஜயமுனி டி சொய்சா  – மீன்பிடி, நீரியல் வளங்கள் மற்றும் கிராமிய

பொருளாதார அமைச்சர்

  1. பி.ஹெரிசன்           – சமூக வலுவூட்டல் அமைச்சர்
  2. கபீர் ஹசீம்            - பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி

  அமைச்சர்

  1. ரஞ்சித் மத்தும பண்டார     – பொது நிர்வாகம், முகாமைத்துவம் மற்றும் சட்டம்,

ஒழுங்கு அமைச்சர்

  1. தலதா அத்துகோரள         – நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர்
  2. பைசர் முஸ்தபா            – மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும்

 விளையாட்டுத்துறை அமைச்சர்

  1. டி.எம். சுவாமிநாதன்    - மீள் குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி

      மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர்

  1. சாகல ரத்னாயக்க       – இளைஞர் விவகாரங்கள், செயற்திட்ட முகாமைத்துவம்

    மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர்.

  1. மனோ கணேசன்   –  தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும

     மொழிகள் அமைச்சர்

  1. தயா கமகே     -  சமூக நலன்புரி மற்றும் ஆரம்ப கைத்தொழில்கள்

     அமைச்சர்

  1. பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா – பேண்தகு அபிவிருத்தி, வன சீவராசிகள்

 மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சர்.

  1. ரவீந்திர சமரவீர    – தொழில், தொழிற்சங்க உறவுகள் அமைச்சர்
  2. விஜயதாச ராஜபக்ஷ    - உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர்.

ஏனைய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவிகள் தற்போதுள்ளவாறே காணப்படுவதுடன், புதிய இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் நாளை முற்பகல் 10.30க்கு ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாணம் செய்வர்..


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X