Editorial / 2023 பெப்ரவரி 26 , மு.ப. 11:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

மின்சாரக் கட்டணத்தை அதிகரித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து புத்தளம் - மதுரங்குளி நகரில் சனிக்கிழமை (25) இரவு தீப்பந்தப் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தேசிய மக்கள் சக்தி ஏற்பாடு குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச அமைப்பாளர்கள், வேட்பாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டதில் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், தீப்பந்தம் ஏந்தி "விவசாயிகளின் வயிற்றில் அடிக்கதே", "மின் கட்டணத்தை உயர்த்தாதே" என இதுபோன்று பல கோஷங்களை எழுப்பினர்.
மேலும், நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, மக்கள் மீது வரிச் சுமையை திணிக்க வேண்டாம் என்றும் நாட்டை ஆட்சி செய்ய முடியவில்லை என்றால் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு வீட்டுக்குச் செல்லுங்கள் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தனர். ரஸீன் ரஸ்மின்


16 minute ago
52 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
52 minute ago
3 hours ago
3 hours ago