Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஜனவரி 27 , மு.ப. 11:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் தாமரை மொட்டுச் சின்னத்தில் காத்தான்குடி நகர சபைக்குப் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
காத்தான்குடி நகர சபையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் தலைமை வேட்பாளராக போட்டியிடும் ஏ.எல்.எம்.நவாஸ் தலைமையில் இடம்பெற்ற மேற்படி தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ஜி.எல்.பீரிஸ் உட்பட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உயர்மட்ட பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இங்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சிங்களத்திலும் தமிழிலும் காத்தான்குடி மக்கள் மத்தியில் உரையாற்றியதோடு, மேடையில் இருந்து இறங்கி, மக்களோடும் சிநேகபூர்வமாக கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(படங்கள்: பழுலுல்லாஹ் பர்ஹான்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago