Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2017 ஜூலை 28 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் அனைத்துப் பாடசாலைகளையும் டெங்கு அற்ற சூழலாக மாற்றுவதற்கான சிரமதான வேலைத் திட்டம், இன்று (28) ஆரம்பமானது.
அனைத்து பாடசாலைகளினதும் மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் அனைவரும் இன்று, நாளை, நாளைமறுதினம் ஆகிய மூன்று நாட்களிலும், பாடசாலைச் சூழலைச் சுத்தம் செய்யும் சிரமதானப் பணிகளில் ஈடுபடுமாறு கல்வியமைச்சு பணித்தமைக்கு அமையவே இந்த வேலைத்திட்டம் ஆரம்பமானது.
நாடளாவிய ரீதியிலுள்ள 10,300 பாடசாலைகளில் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது என, கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார்.
கிண்ணியா
-ஏ.எம்.ஏ.பரீத்
தி/ கிண்ணியா அல் நஜாத் மகா வித்தியாலயத்தில் பெருந்திரளான மாணவர்களும், அதிபர், ஆசிரியர்களும் கலந்து கொண்டு டெங்கு ஒழிப்பு சிரமதானம் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
நீர்கொழும்பு
-எம்.இஸட்.ஷாஜஹான்
நீர்கொழும்பு வலயத்தைச் சேர்ந்த வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயம் , வெலிஹேன ரோமன் கத்தோலிக்க சிங்கள கலவன் பாடசாலை ஆகியவற்றில் எடுக்கப்பட்ட காட்சிகள்.
வவுனியா
-க. அகரன்
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் இன்று காலை 7 மணிமுதல் பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர் ஆசியரியர்கள் ஒன்றிணைந்து இச் சிரமதானத்தில் பங்கேற்றிருந்தனர்.
புத்தளம்
-முஹம்மது முஸப்பிர்
புத்தளம் தெற்கு கல்விக் கோட்டத்துக்குட்பட்ட கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியின் மாணவர்கள், ஆசிரியர்கள் பாடசாலை சுற்றுப் புறங்களில் டெங்கு ஒழிப்பு சிரமதானப் பணிகளில் ஈடுபட்டனர்.
கொட்டகலை
-எஸ்.கணேசன்
கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பாடசாலைகளுக்கு அருகாமையிலுள்ளோர் ஒன்றிணைந்து பாடசாலையையும் அதனை அண்டியுள்ள பகுதிகளையும் துப்புரவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அக்கரைப்பற்று
-வி.சுகிர்தகுமார்
அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலை மற்றும் இராமகிருஸ்ணமிசன் மகாவித்தியாலயம் உள்ளிட்ட பாடசாலைகளிலும் காலை முதல் நடைபெற்றது.
கிளிநொச்சி
-எஸ்.என்.நிபோஜன்
இந்த வேலைத்திட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் பலவும் இணைந்து கொண்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
6 hours ago