Editorial / 2023 டிசெம்பர் 19 , பி.ப. 05:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

மத்திய மாகாண வத்தேகம கல்வி வலய பன்விலை விக்னேஸ்வரா தமிழ் வித்தியாலயம் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேற்றில் முதல் தடவையாக 6 மாணவர்களை சித்தியடையச் செய்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
இவர்களுக்கான பாராட்டு விழா பாடசாலையில் அதிபர் கே.கோபாலகிருஷ்ணன் தலைமையில் இடம்பெற்றபோது உப அதிபர் எஸ்.தில்லைநாதன் மங்கள விளக்கேற்றுவதையும் சமூக சேவகர் ஜீ. பிரபாகரன் சமூக தீபம் பட்டம் வழங்கி கௌரவிக்கப்படுவதையும் பிரதம அதிதி வத்தேகம கல்வி வலய ஆரம்பக் கல்விவிக்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி பாருக் உடையார் சித்திபெற்ற மாணவர்களுக்கு பதக்கம் அணிவித்த பின்னர் மாணவர்கள்,ஆசிரிய ஆலோசகர்கள், வகுப்பாசிரியர்கள் சகிதம் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் காணலாம்.
மெய்யன்


அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .