2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

பாழடைந்த கட்டடங்கள் அழிப்பு

Editorial   / 2018 ஜனவரி 19 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன், எம்.எஸ்.நூர்தீன்

காத்தான்குடி நகரசபைப் பிரிவில், டெங்கு நுளம்புகள் பரவும் சூழலைத் தவிர்ப்பதற்காக, பாழடைந்த மற்றும் பராமரிக்கப்படாத கட்டடங்களைத் தகர்த்தெறியும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக, நகரசபைச் செயலாளர் எம்.ஆர்.எப்.றிப்கா தெரிவித்தார்.

பாழடைந்த கட்டடக் காடுகளைத் துப்புரவு செய்யும் பணிகள், காத்தான்குடி நகரசபை, சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் காத்தான்குடி பொலிஸாரின் துணையுடன் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டன.

காத்தான்குடி முதலாம் குறிச்சிப் பகுதியில் ஆரம்பிக்க்கப்பட்ட இந்த நடவடிக்கையில் முதற்கட்டமாக நீண்ட காலமாக பராமரிக்கப்படாது பாழடைந்த நிலையிலுள்ள கட்டடங்கள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன.

பாழடைந்த கட்டடங்களை பராமரிக்குமாறு அதன் உரிமையாளர்களுக்கு பலமுறை அறிவுறுத்தப்பட்டதாகவும் தமது அறிவுறுத்தல்கள் உதாசீனம் செய்யப்பட்ட நிலையில், கடைசியாக சிவப்பு எச்சரிக்கை அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அதன் பின்னரே அதிகாரிகள் இந்த நடவடிக்கையை ஆரம்பித்திருப்பதாகவும்  அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .