Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Mayu / 2024 மார்ச் 14 , பி.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
தலவாக்கலை-ஒலிரூட் தோட்டத்தில் தீயினால் பாதிக்கப்பட்டு தற்காலிக குடில்களில் வசித்த குடும்பங்களுக்கு, குடிநீர், மின்சாரம், உட்கட்டமைப்பு உட்பட சகல வசதிகளுடன் கூடிய தனி வீடுகள், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமானால் வியாழக்கிழமை (14) வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
அத்துடன், அவர்களுக்கு பிரத்தியேக 'முகவரி' வழங்கப்பட்டு, வீடுகளுக்கு முன் வைப்பதற்கான கடித பெட்டியும் வழங்கப்பட்டது.
ஒலிரூட் தோட்டத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் பாதிக்கப்பட்டு தற்காலிக குடில்களில் வாழ்ந்துவந்த 24 குடும்பங்களுக்கு தனி வீடுகளை அமைப்பதற்கான வேலைத்திட்டம் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சு ஊடாக முன்னெடுக்கப்பட்டது.
கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட வீட்டு திட்டங்களுக்கு உட்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. எனினும், முழுமைப்படுத்தப்பட்ட வீடுகளே மக்களுக்கு கையளிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டு, குடிநீர், மின்சாரம், வீதி உட்பட சகல உட்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட வேண்டும் என அமைச்சர் துறைசார் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
அமைச்சர்ஜீவன் தொண்டமான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாகாணசபை உறுப்பினர் பி.சக்திவேல், இ.தொ.காவின் உப தலைவரும், சட்டதரணியுமான பாரத் அருள்சாமி, முன்னாள் உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் உட்பட மக்கள் பெருமாளனோர் பங்கேற்றுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
55 minute ago
1 hours ago
3 hours ago