2025 மே 19, திங்கட்கிழமை

பிரித் புண்ணிய நிகழ்வு

Editorial   / 2018 மே 19 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசத்துக்காக உயிர்த் தியாகம் செய்த இராணுவத்தினருக்காக இலங்கை மகாவலி அதிகார சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரித் புண்ணிய நிகழ்வு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்குபற்றலில் இன்று (19) நண்பகல் மகாவலி நிலையத்தில் இடம்பெற்றது.

இதன்போது, சகல மகாவலி வலயங்களையும் சேர்ந்த 200 மகா சங்கத்தினர் கலந்துகொண்டனர்.

அமரபுர மகா நிக்காயவின் ஊவ உடுகிந்த மகா நாயக்க தேரரும் கலவுட ஸ்ரீ தம்மநிக்கியேத்தன பிரிவெனாவின் கலாநிதி வண. பொக்கன்ஒருவே ஜினானந்த நாயக்க தேரரும் சமய நிகழ்வுகளை நிகழ்த்தியதுடன், ராமஞ்ஞ மகா நிக்காயவின் தென்னிலங்கை பிரதான சங்க நாயக்கர் வண. ஓமல்பே சோபித்த நாயக்க தேரரினால் விசேட ஆசி உரை நிகழ்த்தப்பட்டது.

இதையடுத்து, அமெரிக்காவில் வசித்து வரும் பூஜியபாத கலாநிதி பொக்கன்ஒருவே தேவானந்த நாயக்க தேரரினால் பாளி மொழியில் இருந்து சிங்கள மொழிக்கு மொழி பெயர்க்கப்பட்ட பௌத்த புத்தகத் தொகுதிகளை ஜனாதிபதி அவர்கள், மகாவலி வலயங்களில் உள்ள விகாரைகளுக்கு இதன்போது வழங்கி வைத்தார்.

மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் வீரகுமார திசாநாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ, மகாவலி பணிப்பாளர் நாயகம் சரத் சந்ரசிறி வித்தான, பாதுகாப்பு பதவி நிலை பிரதானி உள்ளிட்ட முப்படை தளபதிகளும் பாதுகாப்புத் துறையின் சிரேஷ்ட அதிகாரிகளும் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X