Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2023 மார்ச் 12 , பி.ப. 05:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்க கடற்படை கப்பலான யுஎஸ்எஸ் சார்லஸ்டன் (எல்சிஎஸ் - 18) திருகோணமலை துறைமுகத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (12) காலை புறப்பட்டது.
சனிக்கிழமை (11) காலை திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்த கப்பலுக்கு கடற்படை மரபுகளுக்கு அமைவாக இலங்கை கடற்படையினரால் வரவேற்பு அளிக்கப்பட்டது.
127.4 மீற்றர் நீளமான சுதந்திர - கிளாஸ் லிட்டோரல் போர்க் கப்பலான யுஎஸ்எஸ் சார்லஸ்டன் (எல்சிஎஸ் - 18) 100 பணியாளர்களைக் கொண்டது.
கப்பலின் கட்டளை தளபதி லாம்சன், ஏ.ஏ. கிழக்கு கடற்படைக் கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் தம்மிக்க குமாரவை கிழக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் சனிக்கிழமை சந்தித்தார்.
சுமுகமான கலந்துரையாடலின் போது, இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்கள் குறித்து கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்.
ஞாயிற்றுக்கிழமை (12) காலை குறித்த கப்பல் புறப்படும்போது, கடற்படை மரபுக்கு அமைய வழக்கமான பிரியாவிடை அளிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
9 hours ago
10 May 2025