2024 மே 06, திங்கட்கிழமை

பெண் பயனாளிகளுக்கு வல்லங்கள் வழங்கி வைப்பு

Mithuna   / 2023 டிசெம்பர் 18 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக் 

திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட  கரையோரப் பிரதேசத்தின்  செந்தூர்  பிரிவில் கடல் மட்டி சேகரிப்பினை தங்களது பிரதான  வாழ்வாதாரமாக கொண்ட 60 பெண் பயனாளிகளுக்கு வல்லங்களை சனிக்கிழமை (16)   குளோபல் வன் ஸ்ரீலங்கா  (Global One -SriLanka) நிறுவனம்  வழங்கியது.

ஜேர்மன் தூதரகத்தினால் நிதியளிக்கப்பட்ட"வாழ்க்கை மாற்றத்திற்கான வாழ்வாதாரம்: கரையோர பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான மானியம்" எனும் இத்திட்டமானது  பின்தங்கிய கரையோர சமூகங்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காகவும், வருமானம் மற்றும் வேலைவாய்ப்பை வழங்குவதற்கான வாழ்வாதார உதவி வழங்குதலை நோக்காக கொண்டமைந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X