2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

பொங்கல் விழா

Editorial   / 2018 ஜனவரி 16 , பி.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தால்; ஒழுங்கு செய்யப்பட்ட பொங்கல் விழா, இன்று செவ்வாய்க்கிழமை வெகுவிமர்சையாக மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு ஆனைப்பந்தி சித்திவிநாயகர் ஆலயத்தில் இருந்து பொங்கல் விழாவை சிறப்பிக்கும் வகையில் மாபெரும் கலாசார ஊர்வலம் நடைபெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மேலதி அரசாங்க அதிபர் திருமதி சி.சுதர்ஷினி மற்றும் பிரதேச செயலாளர்கள், செயலக உத்தியோகத்தர்கள், மதத்தலைவர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

அதனைத்தொடர்ந்து, மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளினதும் 14 பானைகள் வைக்கப்பட்டு பொங்கல் பொங்கப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.

பொங்கலை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தின் பெருமையையும் பண்பாடடையும் எடுத்துக்கூறும் கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .