2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

போதைப்பொருள் தடுப்பு நிகழ்வு

R.Tharaniya   / 2025 ஜூலை 01 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தலைமையில் செவ்வாய்கிழமை (1) அன்று காலை மஸ்கெலியா சென் ஜோசப் தேசிய பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கும் மஸ்கெலியா முஸ்லிம் வித்தியாலய மாணவர்களும் போதைப் பொருள் சம்பந்தமான தெளிவூட்டல் நிகழ்வு மஸ்கெலியா பொது விளையாட்டு திடலில் இடம் பெற்றது.

நிகழ்வில் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார போதைப் பொருள் பொருள் பாவனையால் ஏற்படும் தீமைகள் குறித்து விபரமாக மாணவர்களுக்கு தெளிவு படுத்தினார்.

இறுதியில் பதாகைகள் ஏந்தி மஸ்கெலியா நகரில் உள்ள பல வீதிகள் வழியாக மாணவ மாணவிகள் பொது மக்களுக்கு தெளிவு படுத்தினார்கள்.

இதற்கான ஏற்பாடுகளை மஸ்கெலியா பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .