Princiya Dixci / 2021 ஓகஸ்ட் 15 , பி.ப. 08:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

மன்னார், மடு அன்னையின் வருடாந்த ஆவணித் திருவிழா திருப்பலி, இன்று (15) காலை 6.15 மணிக்கு கூட்டுத் திருப்பலியாக ஒப்புக் கொடுக்கப்பட்டது.
திருவிழா திருப்பலியை, மன்னார் மறை மாவட்ட ஆயர் வண. இம்மானுவேல் பெர்ணான்டோ ஆண்டகை தலைமையில், சிலாபம் மறை மாவட்ட ஆயர் வண. அருட்கலாநிதி வலன்ஸ் மென்டிஸ் ஆண்டகை மற்றும் குருக்கள் இணைந்து கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.
மடு அன்னையின் ஆவணி மாத திருவிழாவை கொண்டாடும் வகையில், மடுத் திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை எஸ்.ஜே.பெப்பி சோசை அடிகளார் தலைமையில் கடந்த 6ஆம் திகதி கொடியேற்றம் செய்யப்பட்டது.
தொடர்ந்து நவநாள் திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டன. நேற்று சனிக்கிழமை (14) மாலை 6 மணிக்கு ஆறு மணிக்கு வெஸ்பர் ஆராதனை நடைபெற்று¸ நற்கருணை ஆசிர்வாதம் வழங்கப்பட்டது.
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 6.15 மணிக்கு திருப்பலி கூட்டுத்திருப் பலியாக ஒப்புக்கொடுத்தனர். தொடர்ந்து திருச்சொரூப பவனி நடைபெற்ற தோடு, மடு அன்னையின் ஆசி வழங்கப்பட்டது.
நாட்டில் கொரோனா தற்போது தீவிரமடைந்து வரும் நிலையில், மடு திருத்தலத்துக்கு ஏனைய மாவட்டங்களில் இருந்து வருகை தரும் பக்கதர்களின் வருகை நிறுத்தப்பட்டு, சுகாதார வழிமுறைகள்¸ கட்டுப்பாடுகளுக்கு அமைவாக திருவிழா ஒழுங்கு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(படங்கள் - எஸ் .றொசேரியன் லெம்பேட்)





28 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
1 hours ago
1 hours ago