Freelancer / 2023 ஒக்டோபர் 09 , பி.ப. 12:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
பயங்கரவாத எதிர்ப்பு சட்டம், நிகழ்நிலை காப்பு சட்டம் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு பேரணியும் போராட்டமும் மட்டக்களப்பில் திங்கட்கிழமை(10) திகதி முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பேரணி மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகிலிருந்து ஆரம்பமாகி காந்திபூங்காவில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் ஞாபகார்த்த இடம் வரையில் வருகைதந்து அங்கு எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை கிழக்கு மாகாண சிவில் சமூகம் அமைப்பின் ஊடாக இலங்கை அரசானது உடனடியாக அடக்குமுறை சட்டங்களை மீளப்பெறவேண்டும் என்ற தொனிப்பொருளில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கிழக்கு மாகாண சிவில் சமூகம் சார்பாக முகமட் புஹாரி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பெருமளவான பொதுமக்கள் கலந்துகொண்டு பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு பேரணி சென்றது.
வா.கிருஸ்ணா






9 minute ago
15 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
15 minute ago
52 minute ago