2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்பில்…

Editorial   / 2017 நவம்பர் 21 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனர்த்த ஒத்திகையொன்று, இன்று (21) இடம்பெற்றது.

விபத்தில் காயமடைந்த சிலரை, அம்பியூலன்ஸ் மூலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு வந்து, அவர்களுக்கு எவ்வாறு சிகிச்சையளிப்பது?; அனர்த்தங்களின் போது வைத்தியர்கள், தாதியர்கள், ஊழியர்கள் எவ்வாறு நடந்து கொள்வது?; அனர்த்த நேரங்களில் வைத்தியசாலை எவ்வாறு தயாராகுவது? போன்ற ஒத்திகைகள் இதன்போது செய்யப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டம், அனர்த்தங்களுக்கு முகங்கொடுப்பதால் அதற்காக மக்களையும் அதிகாரிகளையும் சேவையாளர்களையும் எந்நேரமும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டியதன் அவசியம் கருதி இந்த ஒத்திகை நிகழ்வு ஏற்பாட செய்யப்பட்டிருந்ததாக, மட்டக்களப்பு இடர் முகாமைத்துவப் பிரிவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

(படப்பிடிப்பு: எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ. ஹுஸைன், வா.கிருஸ்ணா)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .