2026 மே 15, வெள்ளிக்கிழமை

dd

மலைநாட்டில் மூடுபனி ; பொது மக்களுக்கு எச்சரிக்கை

Janu   / 2026 மே 13 , பி.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தின் சகல பகுதிகளிலும் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் தற்போது கடும் மூடுபனி நிலவி வருகின்றது.

இதனால் வீதியின் தெளிவுத்தன்மை (Visibility) மிகவும் குறைவடைந்துள்ளதால், வாகனப் போக்குவரத்துக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகப் போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியைபயன்படுத்தும் வாகன சாரதிகள், வாகனங்களைச் செலுத்தும் போது முகப்பு விளக்குகளை (Headlights) ஒளிரச் செய்தவாறு மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறு நுவரெலியா மாவட்ட போக்குவரத்துப் பிரிவின் உயர் அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் ஹட்டன் - கண்டி, ஹட்டன் - கொழும்பு உள்ளிட்ட ஹட்டன் நகரிலிருந்து ஏனைய பகுதிகளுக்குச் செல்லும் வாகனச் சாரதிகளும் மிகவும் எச்சரிக்கையாக வாகனங்களைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

தொடர்ச்சியாகக் கனமழை பெய்து வருவதால், மலைப்பாங்கான பகுதிகளில் மண் சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, இப்பகுதிகளில் வசிக்கும் மக்களும், வீதியைப் பயன்படுத்துவோரும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

செ.தி.பெருமாள்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .