2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

மலையக நட்சத்திரக் கலைப் பேரவையின் 30ஆவது ஆண்டு விழா

Editorial   / 2026 ஏப்ரல் 07 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

மத்திய மாகாணத்தின் புசல்லாவையைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கிவரும் மலையக நட்சத்திரக் கலைப் பேரவையின் 30ஆவது ஆண்டு நிறைவு விழா, அண்மையில் புசல்லாவை 'பெரிஸ்' (Paris Reception Hall) மண்டபத்தில் மிக விமர்சையாக நடைபெற்றது.

பேரவையின் செயலாளரும் பிரபல கலைஞருமான மருதமுத்து நவநீதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அகில இலங்கை தெலுங்கு காங்கிரஸ் தலைவர் எம். அன்பழகன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார்.

1996ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட இப்பேரவையானது, கடந்த 30 ஆண்டுகளாக சமூக மேடை நாடகங்கள், வீதி நாடகங்கள், இலக்கிய விழாக்கள், நூல் வெளியீடுகள், நடன மற்றும் இசை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் எனப் பல்வேறு கலை மற்றும் சமூக சேவை சார்ந்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. மாவட்ட, மாகாண மற்றும் தேசிய ரீதியில் பல நாடகங்களை அரங்கேற்றி, ஏராளமான விருதுகளையும் பாராட்டுகளையும் இப்பேரவை வென்றுள்ளது.

தலைவர் 'மலையக வாசுதேவன்' கௌரவிப்பு:

இப்பேரவையின் தலைவராக 30 வருடங்களாகப் பணியாற்றி வரும் பன்முக ஆளுமை கொண்ட கலைஞர் மலையக வாசுதேவனுக்கு, 2025ஆம் ஆண்டுக்கான 'கலாபூஷணம்' விருது வழங்கப்பட்டிருந்தது. கடந்த ஜனவரி 12, 2026 அன்று கொழும்பு அலரி மாளிகையில் கலாசார அமைச்சு மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் இணைந்து நடத்திய விழாவில் இவ்விருது வழங்கப்பட்டது.

இதனை முன்னிட்டு, மலையக வாசுதேவனுக்கான விசேட கௌரவிப்பு மற்றும் வரவேற்பு நிகழ்வுகள் இவ்விழாவின் போது இடம்பெற்றன. அத்துடன் கலைஞர் மொகமட் கனி அவர்களுக்கான பாராட்டு நிகழ்வும், 'Hill Star Musical Band' குழுவினரின் இசை நிகழ்ச்சியும் விழாவிற்கு மேலும் மெருகூட்டின.

இந்நிகழ்வில் பேரவையின் தற்போதைய பொருளாளர் M. மகேஷ்வரன், உப தலைவர் M. யோகேஸ்வரன், உப செயலாளர் S. சத்தியநாதன், பிரதித் தலைவர் N. யசோக்குமார் மற்றும் காப்பாளர் I.V.S. விஜயன் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களும் கலைஞர்களும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .