2025 செப்டெம்பர் 09, செவ்வாய்க்கிழமை

மாதாந்த வாழ்வாதார கொடுப்பனவு

Freelancer   / 2021 ஜூன் 17 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தினால் பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மிலின் வழிகாட்டலில், சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாதாந்த வாழ்வாதார கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகின்றது.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவில் சமூக சேவைகள் திணைக்களத்தின் ஊடாக 1798 நபர்களுக்கும், முதியோருக்கான தேசிய செயலகம் ஊடாக 634 நபர்களுக்கும், மாற்றுத்திறனாளிகள் தேசிய செயலகம் ஊடாக 159 மாற்றுத் திறனாளிகளுக்கும் மாதாந்த வாழ்வாதார கொடுப்பனவுகள் வீடுகளுக்குச் சென்று வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிகழ்வில் பிரதேச செயலக சமூகசேவை உத்தியோகத்தர் ஏ.நஜீம், கிராம அதிகாரிகள், சமூகசேவை திணைக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டு கொடுப்பனவினை வழங்கி வைத்தனர்.

M


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X