Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Freelancer / 2023 ஒக்டோபர் 04 , பி.ப. 12:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
முச்சக்கர வண்டி ஓட்டுனர்களால் ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் தமது பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று(04) புதன்கிழமை களுதாவளையில் அமைந்துள்ள மண்முனை தென் எருவில்ப்பற்று பிரதேச சபையின் முன்னால் பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இப் பிரதேசத்திலேயே இருந்து கொண்டு பிரதேச சபைக்கு வரியைச் செலுத்திக் கொண்டு தமது வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வரும் தமக்கு வெளி பிரதேசங்களிலிருந்து வரும் முச்சக்கர வண்டிகளால் பெரும் நட்டத்தை எதிர்கொள்வதாகவும், இதனால் தமது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படுவதாகவும், ஆர்ப்பாட்டக்களார்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில்,ஆர்ப்பாட்டங்களில் 4 பேரையும் பிரதேச சபையின் செயலாளர் சா.அறிவழகன் அவரது காரியாலயத்தினுள் அழைத்ததோடு, கடமையிலிருந்த களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரி.அபயவிக்கிரம அவர்களையும் செயலாளர் அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
இதன்போது பல தீர்மானங்கள் எடுப்பட்ட பின்ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
வ.சக்திவேல்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .