2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

முச்சக்கரவண்டி விபத்தில் சிறுமி உட்பட ஐவர் காயம்

Editorial   / 2018 ஜனவரி 29 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ். கு.புஸ்பராஜ்

 

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அல்பின் தோட்டக் குடியிறுப்பின் மீது, முச்சக்கரவண்டி ஒன்று பாதையை விட்டு விழகி வீழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஆறு வயது சிறுமியொருவர் உட்பட ஐந்து பேர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹட்சன் பிரதேசத்திலிருந்து அக்கரப்பத்தனை - கல்மதுர தோட்டத்துக்கு, குறித்த முச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்தவர்களே, இந்த விபத்தில் சிக்குண்டுள்ளனர்.

குறித்த முச்சக்கரவண்டி, தனது வேகக் கட்டுப்பாட்டை மீறிய நிலையில், அல்பின் தோட்டத்தின் பிரதான வீதிக்கு அருகிலான 25 அடிகள் பள்ளத்தில் அமைந்துள்ள குடியிருப்பின் மீதே வீழ்ந்துள்ளது.

இந்தச் சம்பவம், நேற்று (28) இரவு 8.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதனால், குறித்த குடியிருப்பில் உள்ளவர்களின் உடமைகள் சேதமடைந்துள்ளதாகத் தெரிவித்த அக்கரப்பத்தனை பொலிஸார், இந்தச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .