2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

முதல் தடவையாக….

Editorial   / 2017 நவம்பர் 28 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் முதல் தடவையாக பெண்களுக்கான சத்திர சிகிச்சை விடுதி, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவால் நேற்று முன்தினம் (26) திறந்து வைக்கப்பட்டது.

இதன்போது, அந்த விடுதியில் முதலாவது பெண் நோயாளரும் பதிவு செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டார்.

இந்த வைபவத்தில் மீள்குடியேற்ற புனர்வாழ்வு புனரமைப்பு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார், கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் டொக்டர் எம்.முருகானந்தன், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக், மட்டக்களப்பு சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் திருமதி கிறேஸ் நவரட்ண ராஜா, காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதய ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

(படப்பிடிப்பு: எம்.எஸ்.எம்.நூர்தீன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .