2025 ஒக்டோபர் 25, சனிக்கிழமை

முத்து நகர் விவசாயிகளின் 6ஆவது நாள் போராட்டம்

R.Tharaniya   / 2025 செப்டெம்பர் 22 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை - முத்துநகர் விவசாயிகள் திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக  தொடர் சத்தியாக்கிரக போராட்டமாக தொடர்ந்து 06வது நாளாகவும் இன்றும் (22) போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாயிகளிடமிருந்து கொள்ளையடித்து கம்பெனிகளுக்கு வழங்கப்பட்ட முத்து நகர் விளைநிலங்களை உடனடியாகத் திருப்பிக் கொடு! இந்தியக் கம்பெனிகளின் நில மற்றும் வளச் சூறையாடலுக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்குவோம்!,பொய்கள் வேண்டாம்,விவசாயிகளை இப்படியா நடத்துவது போன்ற வாசகங்களை ஏந்தியவாறும் முத்து நகர் விவசாயிகள் மற்றும் மக்கள் போராட்ட இயக்கம்,அகில இலங்கை விவசாய சம்மேளன பிரதிநிதிகள் இணைந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

முத்து நகர் விவசாயிகளின் விவசாய காணிகளை தனியார் கம்பெனிகளுக்கு சூரிய மின் சக்தி உற்பத்திக்காக வழங்கப்பட்டதை அடுத்து இச் சத்தியக் கிரகப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

விவசாயத்தை நம்பியே வாழ்வாதாரமாகக் கொண்டு மக்கள் தற்போது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் தொடர் போராட்டத்தை முன்னெடுக்கின்றனர். கடந்த அரசாங்கம் போலவே இந்த அரசாங்கமும் நடக்கின்றது. வெளிநாடுகளுக்கு மக்கள் விவசாய காணிகளை தாரை வார்த்து கொடுத்துள்ளனர்.

முத்து நகர் மக்களின் விவசாய காணிகளை தற்போது அபகரித்துள்ளனர்.ஜனாதிபதி செயலகம் வரை போராடிய முத்து நகர் விவசாயிகளுக்கு தீர்வில்லை. மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போதும் தீர்வு தருவதாக கூறியவர்கள் தீர்வு வழங்கவில்லை. இது போன்ற சம்பூரில் காணிகளை அபகரித்துள்ளனர்.எனவே மக்கள் பிரச்சினைகளை சமூகமாக தீர்த்து வைக்கும் படி விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X