Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Editorial / 2023 டிசெம்பர் 20 , பி.ப. 06:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 2113 குடும்பங்களை சேர்ந்த 6268 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மழை சற்று குறைந்ததை அடுத்து வெள்ள நீர் வடிந்தோடி வருகின்ற நிலைமையில் இடைத்தங்கல் முகாம்களில் இருந்த மக்கள் தங்களுடைய வீடுகளுக்கு சென்று வீடுகளை துப்புரவு செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையிலே ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவின் புளியங்குளம் பண்டாரவன்னி கூழாமுறிப்பு பேராறு பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கி இருந்த மக்கள் செவ்வாய்க்கிழமை (19) மாலை முதல் அவர்களுடைய வீடுகளுக்கு சென்று வீடுகளை துப்புரவு செய்து வீட்டினுள் வசித்து வருகின்றனர்.
இருப்பினும் அவர்களுடைய அத்தியாவசிய தேவைகளான குடிநீர், மலசல கூட வசதிகளை பாவிப்பதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்
குடிநீர் கிணறுகளில் வெள்ளநீர் புகுந்துள்ளமையினால் நீரை பருக முடியாத நிலையிலும் நீர் தேங்கியுள்ள நிலையில் மலசல கூடங்களை பாவிக்க முடியாத நிலைகளும் பல இடங்களில் காணப்படுகிறது
வீடுகளுக்குள் இருந்த பொருட்கள் அனைத்தும் நனைந்து விட்டதாகவும் உணவு மற்றும் அடிப்படை தேவைகளுக்காக பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் குறிப்பாக மாணவர்களுடைய கற்றல் செயல்பாடுகளுக்குரிய கற்றல் உபகரணங்கள் அனைத்தும் வெள்ளத்தில் நனைந்துள்ளதாகவும் அவ்வாறான பின்னணியில் மாணவர்களுடைய கற்றல் செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் வீட்டில் இருந்த பல பொருட்கள் வெள்ளநீருடன் அடித்து செல்லப்பட்டு இருப்பதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
13 minute ago
45 minute ago
55 minute ago