Freelancer / 2023 நவம்பர் 15 , மு.ப. 11:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
நலிவுற்ற சமூகத்தை மேம்படுத்தும் அமைப்பின் ஏற்பாட்டில் இலவச கண் பரிசோதனை மற்றும் மூக்குக்கண்ணாடி வழங்கும் நிகழ்வு கிருஸ்து நாதர் தேவாலய மண்டபத்தில் புதன்கிழமை (15) நடைபெற்றது.


அமைப்பின் தலைவி ஸ்ரீ சிவராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மத குருக்கள், இராகலை தோட்ட அதிகாரி, இராகலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பகுதிக்கு பொறுப்பான கிராம சேவகர் மற்றும் அமைப்பின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


இதன்போது பார்வை குறைப்பாடுகளுடைய ஐம்பதுக்கு மேற்பட்டவர்களுக்கு கண் சிகிச்சைகளுடன் மூக்குக்கண்ணாடிகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .