2025 மே 21, புதன்கிழமை

மைதானத்தை வழங்கக்கோரி கவனயீர்ப்பு

Editorial   / 2017 ஓகஸ்ட் 05 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெக்கெய்சர் மைதானத்தை வழங்கக் கோரி, திருகோணமலை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில், கவனயீர்ப்புப் போராட்டமொன்று, இன்று (05) காலை  மேற்கொள்ளப்பட்டது.

பல விளையாட்டுக்கழக இளைஞர் - யுவதிகள் இதில் கலந்துகொண்டு குறித்த விளையாட்டு மைதானத்தை, கழகங்களின் பயன்பாட்டுக்கு வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

அரசு புனரமைக்கவென ஆரம்பித்து பல ஆண்டுகள் சென்ற போதும் இன்னும் குறித்த மைதானம் கழகங்களின் பயன்பாட்டுக்கு வழங்கப்படவில்லை. இதனால் இளைஞர் - யுவதிகள் சிரமப்படுவதாகக் கோஷமிட்டனர்.

(படப்பிடிப்பு: பொன்ஆனந்தம்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .